தமிழக சட்டப்பேரவை ஏப்ரல் 6-ஆம் தேதி கூடுகிறது ; சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு

0
309

தமிழக சட்டப்பேரவை ஏப்ரல் 6-ஆம் தேதி கூடுகிறது, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.மானிய கோரிக்கை கூட்டத்தொடர் சுமார் ஒரு மாத காலம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் அடுத்த கூட்டத்தொடர் எப்போது என்பது குறித்து சபாநாயகர் அப்பாவும் அவர்கள் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது சட்டப்பேரவை ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி கூடுகிறது என்று அப்பாவும் கூறினார் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார் அந்தக் கூட்டத்தில் துறை ரீதியான மானிய கோரிக்கை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

ஒரு மாதகாலம் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்