கோவாக்சின் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திய உலக சுகாதார அமைப்பு

0
139

ஐ.நா மூலம் கொரோனாவிற்கான கோவாக்சின் தடுப்பூசி விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

“கோவாக்சின் தடுப்பூசியைப் பெற்றுள்ள நாடுகள், முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், எந்தமாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடவில்லை.

மேலும் அந்த அறிக்கையில், ஐ.நா அமைப்புகள் மூலம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை வாங்கிய நாடுகள் தக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி செயல்திறன் மிக்கதாக இருப்பதாகவும் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கோவாக்சின் ஏற்றுமதி நிறுத்தப்படுவதால் அதன் விநியோகம் பாதிக்கப்படவுள்ளது.

கடந்த மார்ச் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை, பாரத் பயோடெக் நிறுவனத்தில் அவசர கால பயன்பாட்டுக்கு பிந்தைய ஆய்வு செய்யப்பட்டது. இதன், தொடர்ச்சியாக, விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்