தூத்துக்குடி செல்போன் கடையில் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு..

0
129

தூத்துக்குடியில் உள்ள “தூத்துக்குடி மொபைல்ஸ்” என்ற செல்போன் கடையை உடைத்து ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.


நவீன் ராஜ் என்பவர் இரவு கடையைப் பூட்டி விட்டு காலையில் வந்து கடையைப் பார்க்கும்போது கடையின் பூட்டு உடைபட்டு இருப்பதையும் செல்போன்கள் திருடப்பட்டு இருப்பதையும் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் அவ்விடத்திற்கு வந்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது கையில் கட்டைப் பையுடன் இரண்டு நாட்களாக அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த நபரால் செல்போன்கள் திருடப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்..

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்