விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 3 கலசங்கள் திருட்டு

0
424

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட மூன்று கோபுர கலசங்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரநரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சமீபத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிலையில் விருத்தாம்பிகை அம்மன் கோவிலில் கோபுரத்தில் உள்ள நான்கு அடி உயர மூன்று தங்க முலாம் பூசப்பட்ட கோபுர கலசங்கள் மர்மநபர்களால் திருடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட 3 கலசங்களிலும் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த பிப்.மாதம் 6 ஆம் தேதிதான் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு வெகுசிறப்பாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான மக்கள்,பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கோயிலைச் சுற்றியுள்ள அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் காட்சிப் பதிவுகளை விருத்தாச்சலம் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்