கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தல் – தென்காசி எல்லையில் லாரிகளுக்கு அபராதம்.

0
149

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவில் கனிமங்களைக் கடத்திச் செல்லும் வாகனங்கள் தென்காசி கேரளா எல்லையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாக தினமும் தமிழ்நாட்டில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் அளவுக்கு அதிகமாக கனிமங்கள் கடத்திச் செல்லப்படுவதாக புகார்கள் எழுந்ததன் பேரில் அதிகாரிகள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகரித்து வரும் எம்-சாண்ட் பயன்பாடு: அரசு குவாரிகளில் ஆற்று மணல் விற்பனையை  முறைப்படுத்த கோரிக்கை- Dinamani
FILE PICTURE

மேலும் கேரளாவிற்கு கனிமங்களை எடுத்துச் செல்லும் ஒவ்வொரு லாரிகளிலும் சுமார் 10 முதல் 20 டன் எடை வரை அதிகமான அளவில் கனிமங்கள் கடத்திச் செல்லப்படுவது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் கனிமங்களைக் கடத்தி செல்லும் வாகனங்களுக்கு 13 ஆயிரம் ரூபாயில் இருந்து 22 ஆயிரம் ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையால் கனிமங்கள் கடத்திச் செல்லப்பட்ட லாரிகள் தென்காசி கேரளா எல்லையில் பல மணி நேரமாக நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்