திருச்செந்தூர் கோவில் தரிசனத்திற்கு தடை

0
413

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியிருந்த பக்தர்களை வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர் காவல் துறையினர். கடைகளை அடைத்து ஊரடங்கினை முழுமையாக பின்பற்றி வரும் திருச்செந்தூர் பொதுமக்கள்.

காவல் துறையினர் தகுந்த அறிவுரைகளை கூறி, அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் எடுத்து கூறி வாகனங்கள் மூலம் வருகை தந்த பக்தர்களையும், பாதயாத்திரையாக வருகை தந்து தங்கியிருந்த பக்தர்களையும் அவரவர் சொந்த ஊர்களுக்கே திரும்பி செல்லும்படி ஒலிபெருக்கிகள் மூலம அறிவிப்பு செய்தனர்.

காவல்துறையினரின் அறிவிப்பின்படி பக்தர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்று வருகின்றனர். அரசு விதித்த கட்டுப்பாடுகளின் படி இரவு 10 மணிக்கு மேல் திருச்செந்தூர் பகுதி முழுவதுமே முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் திருச்செந்தூர் பகுதி முழுவதுமே வெறிசோடி காணப்பட்டு வருகின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்