தனது தாயைக் கொடூரமாகக் கொலை செய்த ஊதாரி சைக்கோ மகன்.

0
183

திருவள்ளூர் அடுத்த கூடப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மல்லிகா.ஏழ்மை நிலையில் உள்ள மல்லிகாவும் தனது கணவர் ஆனந்தனும் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர். மல்லிகா – அனந்தன் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் மற்றும் மகன் ராம்தாஸ் ஆகிய இருவருக்குமே திருமணம் முடிந்த நிலையில் தங்களுடன் குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் இளைய மகன் ஜெயபால் என்பவன் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளான். சனிக்கிழமை அன்று மல்லிகாவின் கணவர் அனந்தன் வேலை தொடர்பாக வெளியூருக்கு சென்று விட்டதால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வெளியே ஊர் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்த மகன் ஜெயபாலிடம், “வேலைக்குச் செல்லாமல் வீணாக ஊர் சுற்றுகிறாயே, வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லையா உனக்கு” என , கண்டித்துள்ளார். சட்டென்று கோபமடைந்த ஜெயபால், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது தாயின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளான். இதனால் செய்வதறியாது திகைத்த சைக்கோ மகன் தன் தாயின் உடலை வீட்டிற்குள்ளேயே புதைக்க ஏற்பாடு செய்து குழி தோண்டியிருக்கிறான்.ஆனால் வேலை செய்து பழக்கப்படாத அவன் பாதி தோண்டிய குழியுடன் உடல் சோர்வாகி அங்கேயே படுத்து உறங்கி விட்டான். விடிந்ததும் மீண்டும் குழிதோண்ட தொடங்கியிருக்கிறான். அப்போது அங்கு வந்த அவனது அண்ணன் ராம்தாஸ், இறந்து கிடந்த தனது தாயைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த காவல்துறையினர் மல்லிகாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் ஊதாரி மகன் ஜெய பாலைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்