திருவாதவூர் பெரிய கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா கோலாகலம்

0
287

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள திருவாதவூர் பெரிய கண்மாயில் பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதில் பல நூறு ஆண்டுகளாக மீன்பிடித் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நடைபெற்ற விழாவில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர்களிலும் இருந்து வந்திருந்த ஏராளமானோர் பங்கேற்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கணக்கான மக்கள் கண்மாயில் இறங்கி உற்சாகமாக மீன் பிடித்தனர். விரால், சிலேபி, கட்டுளா உள்ளிட்ட மீன்களை மக்கள் பிடித்துச் சென்று சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்