தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – விசாரணை நிறைவுபெற்றது

0
190

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலியாகினர். இது தொடர்பாக விசாரணை நடத்த அப்போதைய அரசு ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.

இதுவரை 36கட்ட விசாரணைகள் ஆயிரத்து 48 பேரிடம் நடத்தப்பட்டு ஆயிரத்து 544 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து அறிக்கைகள் அனைத்தையும் சரி செய்து 3 மாதங்களுக்குள் அரசிடம் ஒப்படைக்க உள்ளதாக ஆணையத்திடம் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்