Thursday, January 27, 2022

நாயை அடித்து துன்புறுத்தி கொன்றவர்கள் கைது

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நாயை கம்பால் அடித்து கொன்ற இருவர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நடவடிக்கை. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் மனிதாபிமானம் இல்லாமல் 3 பேர் சேர்ந்து ஒரு தெரு நாயை கம்பால் தாக்கி, இறந்து போகும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருவதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மேற்படி வீடியோவில் நாயை அடித்து கொன்ற 3 எதிரிகளை கண்டுபிடித்து உடனே கைது செய்யுமாறு சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜூ உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் மற்றும் காவலர் பாண்டியராஜன் ஆகியோர் மேற்படி வீடியோ குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரம் (எ) தாஸ் (30) த/பெ. இசக்கி, வடக்குதெரு பேய்க்குளம் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தெரு நாய் கடித்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மேற்படி 1) சுந்தரம் (எ) தாஸ் மற்றும் அவரது நண்பர்களான 2) இசக்கிமுத்து (எ) கோட்டை (37) த/பெ. சுப்பையா வடக்கு தெரு பேய்க்குளம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 3) குமார் (32) த/பெ. பட்டாணி ஆகிய 3 பேரும் சேர்ந்து நேற்று (04.12.2021) பேய்க்குளம் முசலைக்குளம் பகுதியில் வைத்து மேற்படி தெரு நாயை கம்பு மற்றும் கல்லால் தாக்கி கொன்றது தெரியவந்தது.

இது குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்படி எதிரிகளில் சுந்தரம் (எ) தாஸ் மற்றும் இசக்கிமுத்து (எ) கோட்டை ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,143பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
19,100சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles