நெல்லையில் சாலை விபத்தில் இரண்டு மருத்துவக்கல்லூரி மாணவிகள் உட்பட மூன்று பேர் பலி . மற்றொரு மருத்துவ கல்லூரி மாணவி படுகாயம். நெல்லை- மதுரை நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் மோதியதில் இரண்டு மருத்துவக்கல்லூரி மாணவிகள் உட்பட மூன்று பேர் பலியாகி உள்ளனர்.

நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் எதிரில் வந்த இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்த நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மாணவிகள் 3 பேர் மீது மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மருத்துவக் கல்லூரி நான்காம் ஆண்டு படிக்கும் மாணவிகள் காயத்ரி, பிரிட்டோ ஏஞ்சல் சம்பவ இடத்தில் பலி . காரை ஓட்டி வந்த சண்முகசுந்தரம் என்பவரும் சம்பவ இடத்திலேயே பலி. நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ் குமார் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
