டிப்பர் லாரி இருசக்கர வாகனம் மோதல் – கணவன் மனைவி சம்பவ இடத்தில் பலி

0
150

தர்மபுரியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய கணவன் மனைவி லாரி விபத்தில் சம்பவ இடத்தில் பலி

பாலஜங்கமனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் மற்றும் வள்ளியம்மாள் இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் திருமண வீட்டிற்கு சென்று தங்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சற்றும் எதிர்பாராத விதமாக வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று புஷ்பராஜ் மற்றும் வள்ளியம்மாள் வந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு அந்த டிப்பர் லாரியின் அடியில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்தில் கொடூரமாக உயிரிழந்தனர்.

டிப்பர் லாரியில் சிக்கிய இருவரும் உயிரிழந்த இந்த கோர விபத்துக்கு அளவுக்கு மீறிய வேகத்தில் வந்த டிப்பர் லாரியை காரணம் என்றும் விபத்தினை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினரிடம்தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி நிற்காமல் சென்றுவிட்டது.

விபத்தை ஏற்படுத்தி இரண்டு பேர் உயிரையும் பலி கொண்டு விட்டு தப்பி ஓடிய லாரிஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெ. சூர்யா, நெல்லை..

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்