மேளதாளத்துடன் தீவிர வாக்கு சேகரிப்பில் பாஜக வேட்பாளர்.

0
190

உள்ளாட்சி மன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி 37ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஆர்.சி.கார்த்திகேயன் மேளதாளம் முழங்க தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

தன்னை வெற்றி பெற செய்தால் வார்டு பகுதியில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை சீரமைத்துத் தருவேன் எனவும், தினந்தோறும் சீரான முறையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்கவும், அனைத்து தெருக்களிலும் தெரு விளக்குகள் சரியாக எறிவதற்கும், தெரு விளக்குகள் இல்லாத பகுதியில் புதிய விளக்குகளை அமைப்பதற்கும், குற்ற சம்பவங்களைைத் தடுக்க வார்டில் அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தவும் , 37ஆவது வார்டில் அரசு பொது இ-சேவை மையம் அமைக்கவும் ,பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கூடுதல் ரேஷன் கடைகள் அமைக்கவும், திருநெல்வேலி மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் மக்களுக்கு உடனடியாக கிடைக்க நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்