திருநெல்வேலி -ஈரோடு மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்குமா?

0
181

நெல்லையில் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட. திருநெல்வேலி -ஈரோடு மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வருமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நெல்லையில் இருந்து தினமும் அதிகாலை 5 மணி 20 நிமிடங்களுக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு- மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு திருநெல்வேலி ஈரோடு பாசஞ்சர் ரயில் ( வண்டி எண்-56826) என்ற ஒரு பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது, இந்த ரயில் முன்பாதி திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரையிலும் பின்பாதி திண்டுக்கல்லில் இருந்து மயிலாடுதுறை வரையும் இயக்கப்பட்டு வந்தது, இந்நிலையில் ஒருநாள் கொரானா பெருந்தொற்று காரணமாக இந்த ரயில் அடியோடு நிறுத்தப்பட்டது.

இந்த ரயில் மூலம் தினமும் ஏராளமானோர் மதுரை, திண்டுக்கல் ,எரியோடு ,ஈரோடு ,திருச்சி ,தஞ்சாவூர் கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளுக்கு சென்று வந்தனர், தற்போது இந்த ரயில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் கடும் சிரமத்தில் உள்ளனர், ஏற்கனவே தற்போது திருநெல்வேலியில் இருந்து திருநெல்வேலி -செங்கோட்டை, திருநெல்வேலி- திருச்செந்தூர், திருநெல்வேலி- தூத்துக்குடி ஆகிய பாசஞ்சர் ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வருகிறது ; அதேபோல் திருநெல்வேலியில் இருந்து ஈரோடு மயிலாடுதுறை போன்ற இடங்களுக்கு செல்ல நிருத்தப்பட்ட திருநெல்வேலி ஈரோடு பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வரவேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் செவிசாய்க்கும் ரயில்வேதுறை?

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்