தாமிரபரணி ஆற்றுக்கரைகளில் திதி,தர்ப்பணம் கொடுக்க அக்டோபர் 5 முதல் 10 வரை தடை

0
187

நாளை மஹாள்ய அம்மாவாசையை முன்னிட்டு, கோவில்களுக்கு பக்தர்கள், மற்றும் முன்னோருக்கு கடமை செலுத்த, திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க, மக்கள்கூட்டம் அதிகமாக வருமென்ற காரணத்தினால், இந்து அறநிலையத்துறை அக்டோபர் 5 முதல் 10 வரை கோவில் வழிபாட்டிற்கும், திதி, தர்ப்பணம் போன்ற சம்பிரதாய சடங்குகள் செய்யவும், தடை செய்யப்பட்டுள்ளதென அறிவித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்படா வண்ணம் தடுக்கும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களும்,பக்தர்களும் சூழ்நிலை கருதி அரசிற்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்