தென்கலத்தில் இன்று அவரி இலை கிட்டங்கி தீக்கிரை பல லட்சம் சேதம்

0
273

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகேயுள்ளதென்கலம் கிராமத்தில் பஷீர் முகமது 45, என்பவருக்குச்சொந்தமான அவரி இலை கிட்டங்கியுள்ளது.

பள்ளிவாசல் தெருவில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த கிட்டங்கியில் அவரி இலைகளை காயவைத்து சலித்து பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தார்.

இன்று மாலை 5:30 மணிக்கு தண்ணீர் தொட்டி மோட்டார் இயக்கும்போது மின் கசிவு ஏற்பட்டதால் கிட்டங்கி முழுவதும் தீக்கிரையானது.

தகவல் அறிந்து கங்கைகொண்டான் தீயணைப்பு படையினர் மாலை 6:30 மணிக்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் முழுவதும் சேதமடைந்துப்போனது.

சேதமதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்குமெனத்தெரிகிறது. சம்பவம் குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்