Tuesday, December 7, 2021

தக்காளி விலை கிலோவுக்கு ரூ.40 குறைவு

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனையடுத்து தமிழக அரசும் பண்ணை பசுமை காய்கறிகள் மூலமாக நேற்று முதல் தக்காளி ஒரு கிலோ ரூ.79க்கு விற்பனையை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் வரை குறைந்துள்ளது.

நேற்று வரை ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று லாரிகளில் வரத்து அதிகரித்ததால் தக்காளி விற்பனையில் கிலோவுக்கு ரூ.40 குறைந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். ஆனாலும் மேலும் விலை குறைய வேண்டும் என்றே பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles