Tuesday, December 7, 2021

வள்ளியூர் தாழ்தள பாலத்தில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு

வள்ளியூரிலுள்ள தரைத்தளப்பாலம்  நேற்று பெய்த கனமழையில் மூழ்கியது, இதனால்  போக்குவரத்து வாகனங்களில்  பயணித்த  வாகன  ஓட்டிகள்  தண்ணீருக்குள் வெகுநேரம்  சிக்கி தவித்தனர்.

வள்ளியூரில்  கடந்த  5 வருடங்களாக  பெரும் தாமதமாக  கட்டப்பட்டு வந்த,  தரைத்தளப்பாலம்  முழுமையாக கட்டிமுடிக்காத நிலையில், கடந்த  3 மாதங்களுக்கு முன்னர்  தி.மு.க.அரசின் உத்தரவின்படி   அவசரகோலத்தில்  திறக்கப்பட்டது.

இதனால்  மழை நீர் வடிவதற்கான  வடிகால் ஓடைகள்   கட்டப்படுவதற்கு முன்னரே  பாலம் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று   சுமார்
 2 மணி அளவில் வள்ளியூரில்  சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையினால்  தரைத்தளப்பாலம் நீருக்குள் மூழ்கியது.

இதனால்  வெளியூர்  சென்று திரும்பிவந்து கொண்டிருந்த வாகனங்கள்,இருசக்கர வாகனங்கள், மற்றும் பேருந்துகள், போன்றவைகளில் சென்றவர்கள் செய்வதறியாது தத்தளித்தனர். சில மணி நேரங்களுக்குப்பிறகு வாகன ஓட்டிகள் மாற்று வழியாக தங்களது வாகனங்களை தள்ளியபடி சென்றனர்.

பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் முன்னரே, அதனை திறந்துவிட்டதால் இத்தகைய நிலைமை ஏற்பட்டதென உள்ளூர் வாசிகள் கருத்து தெரிவித்தனர்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles