மின்சாரம் பாய்ச்சி பக்கத்து வீட்டுக்காரரை கொல்ல முயற்சி ; காப்பாற்ற வந்தவர் உபட இருவர் பலி.

0
226

திருவண்ணாமலை சொரகுளத்தூர் அருகே மின்சாரம் பாய்ச்சி பக்கத்து வீட்டுக்காரரை கொல்ல முயற்சி ; காப்பாற்ற வந்தவர் உற்பட இருவர் மின்சாரம் பாய்ந்து பலி.

ஏழுமலை என்பவருக்கும் சரன்ராஜ் என்பவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

மின்சாரம், கொலை, பலி, உயிரிழப்பு

இந்த நிலையில் மாட்டுக் கொட்டகையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த சரண்ராஜ் கொலை செய்யும் நோக்கத்தோடு ஏழுமலை என்பவர் மின்சார வயரை ஒரு இரும்பு ராடு சுற்றி அந்த மின்சார வயர் இணை மின் இணைப்பு கொடுத்துக்கொண்டு, தூங்கிக்கொண்டிருந்த சரண்ராஜ் மீது பாய்ச்சி கொலை செய்து விடலாம் என்ற நோக்கத்தில் மாட்டு கொட்டகையை நெருங்கி அவர் மீது இரும்பு ராடை வைத்து மின்சார பாய்ச்சினார் அப்பொழுது சரண்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்ததால் அவர் அலறி துடித்தார். இந்த சத்தத்தை கேட்டு, அண்டை வீட்டுக்காரர் வேணுகோபால் எழுந்து ஓடிவந்தார் வந்தவுடன் ஏழுமலை கையில் இருந்த மின்சார ராடை பிடுங்கி சரன்ராஜ்-ஐ காப்பாற்ற முயன்றார். அப்பொழுது வேணுகோபால் மீது மின்சாரம் பாய்ந்தது. தவறுதலாக ஏழுமலை மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சம்பவம் நிகழ்ந்ததை கேள்விப்பட்ட காவல்துறையினர், நிகழ்வு இடத்திற்கு வந்து விசாரணை செய்து வழக்கு பதிவு செய்தனர்.

மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்று காப்பாற்ற வந்தவர் இறந்து கொலை செய்ய முயன்ற வரும் இறந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்