Thursday, January 27, 2022

மஞ்சள் விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகைக்கு முன் மஞ்சள் விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி.

பொங்கல் பண்டிகை என்றாலே செங்கரும்பும், மஞ்சள் கொத்தும் தான் நினைவுக்கு வரும், பழங்கால மக்கள் முறைப்படி வீடுகள் தோறும் பொங்கல் வைத்து செங்கரும்பும், மஞ்சள் கொத்தும், சாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம், அது இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


மஞ்சள் குலையினால் கட்டப்பட்டு பொங்கல் பானையில் பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது , தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகை வரும் வெள்ளிக் கிழமை தமிழகத்தில் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் மஞ்சள் குலை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நெல்லை டவுண் பாறையடி ஊரை சேர்ந்த ஊய்க்காட்டன் என்ற விவசாயிடம் கேட்டப்பொழுது அவரின் விவசாய நிலத்தில் பொங்கல் பண்டிகைக்கு அறுவடைக்கு மஞ்சள் குலையினை அதிக அளவில் பயிரிட்டதாகவும் இந்த ஆண்டு அளவுக்கு அதிகமாகவே மழை பெய்த காரணத்தால் மஞ்சள் விளைச்சல் அமோகமாக இருந்ததாகவும், மேலும் வரும் வெள்ளி கிழமை பொங்கல் பண்டிகை என்பதால் மஞ்சள் குலையினை விற்பனை செய்ய வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்வதாகவும் இதனால் போதிய வருமானம் கிடைப்பதாகவும் கூறினார்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,143பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
19,100சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles