தொலைக்காட்சி கோபுரம் குண்டு வீசி தகர்ப்பு 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.

0
172

உக்ரைன் கார்கிவ் செர்னிஹிவ் ஆகிய நகரங்கள் மீது ரஷ்யப் படை ஆக்ரோஷ தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் கீவ் நகரில் உள்ள தொலைக்காட்சி கோபுரம் குண்டு வீசி தாக்கப்பட்டுள்ளது, இதில் 5 பேர் பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது.

உக்ரைன் கீவ் நகரில் தொலைக்காட்சி கோபுரம் தாக்கப்பட்டதால் அங்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது இதில் 5 பேர் இருந்தனர் என்பதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

உக்ரைன் பிற நாடுகளிடமிருந்து அணு ஆயுதங்கள் வாங்குவதை ஒருபோதும் அனுமதிக்க  மாட்டோம்: ரஷ்யா - Dinakaran

உக்ரைன் அணு ஆயுதம் வாங்க ரஷ்யா கடும் எதிர்ப்பு ; மற்ற நாடுகளிலிருந்து உக்ரைன் அணு ஆயுதங்கள் வாங்குவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது உக்ரைன் அணு ஆயுதங்களை வாங்க அனுமதிக்கமாட்டோம் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் மூன்றாம் உலகப் போர் பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இன்று 7வது நாளாக உக்ரைனில் கடும் யுத்தம் நடைபெற்று வரும் வேளையில்
8.36 லட்சம் அகதிகள் வெளியேற்றம் என்று ஐநா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து வெளி நாடுகளுக்கு செல்வோர் 10 ஆயிரம் டாலருக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது என்று அரசு அறிவித்துள்ளது அக்கறையுடன் அந்தப் போரினால் புதிய கட்டுப்பாடுகள் வெளிவந்துள்ளது.

பெ. சூர்யா , நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்