இரண்டு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு , இரண்டு வேட்பாளர்கள் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி ..!

0
146

திருநெல்வேலி பேரூராட்சி பனங்குடி 4 வது வார்டில் பாஜக வேட்பாளர் மனுவில் வெற்றி பெற்றார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியில் 12 வது வார்டில் பாஜக வேட்பாளர் ஸ்ரீகலா ஆரல்வாய்மொழி பேரூராட்சி இரண்டாவது வார்டு பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கரூர் பழைய ஜெயங்கொண்டம் 3வது வார்டு பாஜக கோபிநாத் என்ற வேட்பாளர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக அதிமுக வேட்பாளர்களை அவர் தோற்கடித்துள்ளார்.

மதுரை மாநகராட்சியில் 86 வது வார்டில் பாஜக வேட்பாளர் பூமா ஜனா ஸ்ரீ முருகன் வெற்றி பெற்றார்.

நெல்லை; பணகுடி பேரூராட்சி 4 வது வார்டில் அதிமுக பாஜக வேட்பாளர்கள் சமமான வாக்குகள் பெற்றால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பது என அறிவிப்பு.

சத்தியமங்கலம் நகராட்சியில் 8வது வார்டில் பாஜக வேட்பாளர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இரணியல் பேரூராட்சியில் பாஜக வெற்றி கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியில் 4 5 6 7 8 9 10 12 வார்டுகளில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

போடி பேரூராட்சி வார்டில் 13 இடங்களில் தாமரை மலர்ந்து உள்ளது.

பரமக்குடி நகராட்சியில் உள்ள முப்பத்தி ஆறு வார்டுகளில் பாஜக 11 வருடங்கள் முன்னிலை வகித்து வருகின்றது.

கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் ஒரு வார்டில் பாஜக வெற்றி மீதமுள்ள 14 வார்டுகளில் சுயேட்சை வெற்றி பெற்றுள்ளது.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தென்திருப்பேரை பேரூராட்சி இரண்டாவது வார்டு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

நீலகிரி மாவட்டம் பிக்கெட்டி பிக்கட்டி பேரூராட்சி 12வது வார்டு பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்