ஆசை வார்த்தைகளைக் கூறி இரு பெண்களைக் கடத்திச் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியர் கைது.

0
136

சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியராக இருந்தவர் மணிமாறன். அவரது தவறான நடவடிக்கைகளால் 2019ஆம் ஆண்டு அவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். கோவைக்கு மாற்றப்பட்ட அவர் அங்கு 16 வயது சிறுமி ஒருவருக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். அச்சிறுமிக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி ஆசிரியர் மணிமாறன் அச்சிறுமியைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடத்திச் சென்றார்.. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோவை காவல்துறையினர் தனிப்படை அமைத்து மணிமாரணை பல்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர். மேலும் அவர் பொள்ளாச்சி, கொடைக்கானல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சிறுமியை அழைத்துச் சென்றது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.இந்நிலையில் மேலும் அவர் கன்னியாகுமரியில் தங்கியிருந்து அங்குள்ள வீட்டின் உரிமையாளரின் 19 வயது மகளையும் கடத்திச் சென்று தலைமறைவானார்.

இதுகுறித்து மணிமாறன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி காவல்துறையினரும் மணிமாறன் மீது வழக்குப்பதிவு செய்தனர். கோவ, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் சேர்ந்து அவரை சில மாதங்களாக பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது மணிமாறன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.காவல்துறையினர் அவரிடம் இருந்த 16 வயது சிறுமி மற்றும் 19 வயது இளம்பெண் இருவரையும் மீட்டனர். இரு பெண்களைக் கடத்தியதற்கான காரணம் குறித்தும் அவர்களைப் பாலியல் ரீதியாக மணிமாறன் துன்புறுத்தினாரா என்பது குறித்தும் அவரிடம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்