பெண்ணை அவதூறாக பேசி அடித்து மிரட்டல் விடுத்த இருவர் கைது .

0
149

தேவர்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வன்னிகோனந்தலை சேர்ந்த முத்துலெட்சுமி(40), என்பவரது மகளை அதே பகுதியை சேர்ந்த மணி செல்வம் (23) என்பவர் காதலித்து வந்ததாகவும் இதனை அவரது தாயார் கண்டித்ததால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

மேற்படி முத்துலட்சுமி அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்குவந்த மணிசெல்வம் மற்றும் அவரது நண்பரான தவமணி இருவரும் முத்துலட்சுமி அவர்களை வழிமறித்து அவதூறாகப் பேசி கையால் அடித்து மிரட்டல் விடுத்துள்ளதாக சொல்லப்படுகின்றது

இதுகுறித்து முத்துலட்சுமி அவர்கள் தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ரோச் அந்தோணி மைனர்ராஜ், விசாரணை மேற்கொண்டு பெண்ணை தாக்கி மிரட்டல் விடுத்த இருவரையும் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்