தூத்துக்குடியில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்.

0
251

தூத்துக்குடியில் அரை சவரன் கம்மலுக்காக நேற்று மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு ஆதிபராசக்தி நகர், மச்சாது நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் ராஜூ. அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பவானி. இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.இந்நிலையில் பிற்பகல் 2 மணிளவில் பவானி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரைக் கழுத்தை நெறித்தும், கட்டையால் தாக்கியும் கொலை செய்துள்ளனர்.

பின்னர் அவர் காதில் அணிந்திருந்த கம்மல்களை திருடிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.இந்நிலையில் இக்கொலை நடந்து 4 மணி நேரத்திற்குள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தேநீர் விடுதியில் முத்துப்பாண்டி என்கின்ற கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி செந்திலாம்பண்ணையை சேர்ந்த முத்துப்பாண்டி. இவர் புதுக்கோட்டை அய்யனார் காலனியில் வசித்து வந்தார். இவர் மீது கஞ்சா விற்பனை செய்தது உள்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

This image has an empty alt attribute; its file name is c534d1e325931bf31f0441faa9f5ef9e_original.jpg

 மாலையில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை அருகே நின்று கொண்டு இருந்த போது, அங்கு மர்ம ஆசாமிகள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து திடீரென மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக முத்தப்பாண்டியை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தூத்துக்குடியில் நான்கு மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நடந்த இரு கொலை சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இச்சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ய நெல்லை டிஐஜி பிரவேஷ்குமார் கொலை நடந்த இடங்களுக்கு நேரில் சென்று விசாரணையை மேற்கொண்டார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்