தேர்வு எழுதாமலே மருத்துவ சான்றிதழ் வழங்கப்படும்- உக்ரைன் அரசு அறிவிப்பு.

0
78

ரஷ்யா உக்ரேன் இடையே ஏற்பட்ட போரின் காரணமாக உக்ரைனில் தங்கி மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை மேற்கொண்ட வெளிநாட்டு மாணவர்கள் உக்ரைனை விட்டு முழுவதுமாக வெளியேறி வருகின்றனர். இந்தியாவிலிருந்து மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்காக உக்ரைனில் தங்கியிருந்த மாணவர்களில் இதுவரை 22,500 பேரை இந்தியா மீட்டுள்ளது குறிப்பிடதக்கது.போரினால் தாயகம் திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்த நிலையில் அது பெரும் விவாதப் பொருளாக மாறியது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட உக்ரைன் மருத்துவப் பல்கலைக்கழகங்கள், மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான KROK-1 தேர்வை ஓராண்டு தள்ளி வைத்துள்ளதாகவும் , ஐந்தாம் ஆண்டுக்கான KROK-2 தேர்வையும் மற்றும் இறுதி ஆண்டுக்கான கட்டாயத் தேர்வையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும் தேர்வு எழுதாமலேயே மருத்துவ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. இதனால் தங்கள் எதிர்காலம் வீணாகி விடுமோ என்ற அச்சத்தில் இருந்த இந்திய மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் உக்ரைனில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு படித்த மருத்துவ மாணவர்களின் பொருட்செலவு வீணாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்