“பெட்ரோல் டீசல் உயர்வுக்கு உக்ரைன் ரஷ்யா போரே காரணம்” – நிர்மலா சீதாராமன்

0
304

மக்களவையில் நேற்று நிதி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதுதொடர்பான விவாதங்களுக்கும் அவர் பதிலளித்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றிய கேள்வி எழுந்தபோது உக்ரைன் ரஷ்யா போரின் எதிரொலியாக சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்த காரணத்தால் மட்டுமே இந்தியாவிலும் பெட்ரோல் டீசலின் விலை அதிகரித்திருப்பதாக அவர் விளக்கம் அளித்தார்.

மேலும் ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது கொரியா போரின் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டதையும் இந்திராகாந்தி பிரதமராக இருக்கும்போது கடுமையாக வரிகள் உயர்த்தப்பட்ட தையும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார்.

கொரோனா நெருக்கடிகளைக் காரணம் காட்டி மற்ற நாடுகளைப் போல இந்தியாவில் வரிகள் எதுவும் உயர்த்தப்படவில்லை எனவும், மக்களின் மீதான சுமைகளைக் குறைப்பதற்கு மோடி தலைமையிலான அரசு மிக உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்