உக்ரைன் ரஷ்யா பேச்சுவார்த்தை ; உடனடியாக ரஷ்யா போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் – உக்ரைன் தரப்பு

0
125

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு நேற்று நேட்டோ அமைப்பு ஆயுதங்கள் நிதி உதவி அளிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் பெலாரசில் நடந்துவரும் நிலையில் நேட்டோஅமைப்பு உக்ரைனுக்கு ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள், ராணுவ டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் நிதி உதவியும் அளிப்பதாக நேட்டோ அறிவித்திருப்பது ரஷ்யா-வை மேலும் கோபமூட்டி உள்ளது.

உக்ரைன் மீது போர் தொடங்கிய நாள் முதலே ரஷ்யா இந்தப் போரில் வேறு யாரேனும் பங்கு எடுத்தாலோ அல்லது உக்ரைனுக்கு உதவினாலும் மோசமான விளைவுகளை, அதாவது வரலாறு காணாத விளைவுகளை சந்திப்பார்கள் என மிரட்டல் விடுத்த நிலையில் நேட்டோ அமைப்பு ஆயுதங்கள் வழங்கப்படும் என அறிவித்திருப்பது ரஷ்யாவை ஆழ்ந்த கோபத்திற்கு உட்படுத்தியுள்ளது. இந்நிலையில் மின்ஸ்க் நகரில் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பு தெரிவித்ததால் கோமால் நகரில் இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.

இதில் உடனடியாக ரஷ்யா போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் படைகள் அத்தனையும் வாபஸ் வாங்கிக் கொண்டு உடனடியாக உக்ரைனை விட்டு செல்ல வேண்டும் என்று உக்ரைன் தரப்பு வலியுறுத்தி உள்ளது.

பெ,சூர்யா, நெல்லை.

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்