இந்தியாவுக்கு விருது வழங்கி கவுரவித்த ஐநா மன்றம்

0
30

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இந்திய உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான திட்டத்திற்கு இந்தியாவிற்கு ஐநா விருது கிடைத்துள்ளது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அனைவரது உடல் நலத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற பிரதமருக்கு இயக்கத்திற்கு இந்திய உயர் ரத்த அழுத்தக் கட்டுப்பாடு முன்னெடுப்பு வலுவூட்டி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆரோக்கியமான மற்றும் உடல் உறுதி இந்தியாவை கட்டமைப்பதில் நாம் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் 2022 இடையேயான முனைப்புக் குழு மற்றும் உலக சுகாதார அமைப்பின் சிறப்பு திட்டத்தின் ஆரம்ப சுகாதார நல்வாழ்வு விருது இந்தியாவிற்கு கிடைத்துள்ளது எனவும் அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்