ஐநா பொதுச்செயலாளரான ஆன்டனியோ குட்டரெஸ் ரஷ்யாவூக்கு கடும் கண்டனம்

0
381

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக இன்று ஐநா சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என ஐநா பொதுச்செயலாளரான ஆன்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து ஐநா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ரஷ்யாவை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்த நிலையில் ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பாக விவாதிக்க ஐநா பொதுச் சபையின் 11-வது அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

67 ஆண்டுகால ஐநா வரலாற்றில் இதுவரை பத்து முறை மட்டுமே அவசர கூட்டம் நடைபெற்றுள்ளது கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக போரில் உயிர் நீத்த அவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

என்னுடைய பதவி காலத்தில் இது மிகவும் கவலை தரக்கூடிய சம்பவம் என்று ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.

புதின் என்னுடைய இதயத்தின் அடியிலிருந்து கேட்கிறேன், உங்கள் படைகள் நடத்தும் தாக்குதலை நிறுத்துங்கள், அமைதிக்கு இடம் கொடுங்கள் ஏற்கனவே மக்கள் பலர் இறந்துவிட்டனர். அதிபர் புதின் அவர்களே மனிதநேயத்தின் பெயரால் உக்ரேனில் இருந்து படைகளை திரும்பப் பெறுங்கள் என்று கூறினார்.

ஐரோப்பிய நாடுகள் வான்வெளியில் பறக்க ரஷ்ய விமானத்திற்கு தடை விதித்து இருப்பதால் ஐநாவின் அவசரக் கூட்டத்தில் ரஷ்யாவின் தரப்பில் வெளியுறவுத்துறை மந்திரி லாவ்ரோவ் பங்கேற்கவில்லை. இருப்பினும் ரஷ்யாவுக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டிஎஸ். மூர்த்தி போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உக்ரைனுக்கு தேவையான உணவு பொருள்கள் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்தியா அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெ . சூர்யா, நெல்லை.

.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்