சென்னை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீச்சு

0
243

சென்னை பாஜக அலுவலகத்தில் நள்ளிரவு ஒரு மணிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூன்று முறை பெட்ரோல் குண்டுகளை வீசினார்.சிசிடிவி காட்சிகளை பதிவுசெய்து காவல்துறையினர், பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபரை தேடி வந்தனர், இந்நிலையில் சென்னை நந்தனத்தில் சேர்ந்த கருக்கா வினோத் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வினோத் கைது

பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி.

ரவுடி கருக்கா வினோத் 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் பத்து குற்ற வழக்குகள் உள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2015 இல் மாம்பலம் பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றை மூட வலியுறுத்தி பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டவன் கருக்கா வினோத் என தெரிவித்தனர்.

2017 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கிலும் கைது செய்யப்பட்டரௌடிதான் இந்த கருக்கா வினோத் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

பெ . சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்