நாகப்பட்டினம் பாஜக இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

0
183

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்த பாஜக இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் புவனேஸ்வர்ராம் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்த பாஜக இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் புவனேஸ்வர்ராம் கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசினார். இதில் காரின் இடது பக்க கதவு , இடது பக்க டயர் ஆகியவை தீப்பிடித்து எரிந்துள்ளது . இதனை அவ்வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தகவல் தெரிவித்ததன் பேரில் வீட்டில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர் .இதுகுறித்து கீழையூர் காவல் நிலையத்தில் புவனேஸ்வர்ராம் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர் .பா.ஜ.க நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டுகள் வீசிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்