நகர்புற உள்ளாட்சி தேர்தல் நிலவரம்

0
161

தேர்தல் வாக்குபதிவு நிலவரம்;

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் ஒரு மணி வரை 35. 34 % சதவிகிதம் வாக்குப்பதிவு.

மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக சென்னை மாநகராட்சியில் 23.4 2 விழுக்காடு வாக்குகள் பதிவு.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 50.5.8 விழுக்காடு வாக்கு பதிவு.

மாநகராட்சிகளை பொறுத்தவரையில் கரூரில் அதிகபட்சமாக 46.04 சதவிகிதம் பேர் ஜனநாயக கடமை ஆற்றி உள்ளனர்.

பணப்பட்டுவாடா நடந்ததாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் பேட்டி மதுரை மேலூரில் வாக்காளர்களிடம் ஹிஜாபை அகற்றுமாறு பாஜக முகவர் கூறியது குறித்து ஆட்சியரிடம் அறிக்கை கேட்பு.

சென்னை தேனாம்பேட்டையில் வாக்களித்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாக்காளர்கள் உடன் வரிசையில் நின்று மனைவி துர்காவுடன் ஜனநாயக கடமையை ஆற்றினார்.

தோல்விக்கான காரணத்தை கூற கோவையில் அதிமுக நாடகம் நடத்தியுள்ளது முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேட்டி.

அமைதியான சுதந்திரமான நடுநிலையான தேர்தலை உறுதி செய்ய வேண்டும்.
கோவையில் இன்றும் கூட வாக்குக்கு பணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு.

சென்னை விருகம்பாக்கத்தில் வாக்களித்தார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்சியில் அமைச்சர் கே என் நேரு அன்பில் மகேஷ் வேலூரில் அமைச்சர் துரைமுருகன் விழுப்புரத்தில் பொன்முடி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தார். அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சென்னையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் ஆகியோர் வாக்களிப்பு.

சென்னையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சசிகலா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜயை வாக்களித்தார் ரசிகர்கள் புடைசூழ கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சைக்கிளில் வந்த விஜய் இம்முறை காரில் வந்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் திமுகவினர் தாக்கியதாக அதிமுகவினரும் அதிமுகவினர் தாக்கியதாக திமுகவினரும் குற்றச்சாட்டு.

மதுரை மாநகராட்சியின் 42 வது வார்டில் தனது வாக்கை வேறு யாரோ ஒருவர் இறந்து விட்டதாக பெண் புகார்

கள்ளஓட்டு போடபட்டதை அறிந்து கண்ணீருடன் தேர்தல் அதிகாரியிடம் முறையீடு.நான் படிக்காத முட்டாள் இந்த ஒரு உரிமைதான் எனக்கு இப்போ அதுவும் கிடையாதா என அழுது புலம்பினார்.

பேரூந்த ஓட்டுநர் ஒருவர் தான் ஓட்டிவந்த பேரூந்தை நிறுத்திவிட்டு வந்த தனது வாக்கினை பதிவுசெய்து பிறகு பேரூந்தை எடுத்து இயக்கிசென்றார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்