அமெரிக்கா,
பெல்ஜியம் போலந்து ஜெர்மனி உள்ளிட்ட 36 நாடுகளுக்கு வான் எல்லையை தடை செய்த ரஷ்யா.

0
312

அமெரிக்கா,
பெல்ஜியம் போலந்து ஜெர்மனி உள்ளிட்ட 36 நாடுகளுக்கு வான் எல்லையை ரஷ்யா தடை செய்தது.

கடந்த ஐந்து நாட்களாக உக்ரைனை கொடூரத் தாக்குதல் புரிந்து வந்த ரஷ்யா தலைநகரை நெருங்கியும் கீவ் பகுதியை கைப்பற்ற முடியாமல் தவித்து வரும் சூழ்நிலையில் அணு ஆயுதப் படையை தயார் நிலையில் இருக்கும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா தொடர்ச்சியாக ஐந்து நாட்களாக போர் புரிந்தும் ராணுவ நிலைகளை தாக்கி அழித்தும், முக்கிய தலைநகர் கீவ் நகரில் இறங்கி சுற்றிவளைத்து தாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், இதனை கண்டித்து ஐரோப்பிய யூனியன் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது.

மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் தங்களின் வான் எல்லையை பயன்படுத்த ரஷ்யாவிற்கு தடை விதித்தது.

இதற்கு பதிலடியாக ரஷ்யா ஐரோப்பிய யூனியனில் உள்ள அங்கம் வகிக்கக்கூடிய அமெரிக்கா, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட 36 நாடுகளுக்கு தனது வான் எல்லையை பயண்படுத்த தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து இந்தியா ரஷ்யாவை வலியுருத்தியதன் பேரில் ரஷ்யா உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
உக்ரைன் தரப்பில் இதற்கு சம்மதித்து மேற்கொண்ட சமாதான பேச்சுவார்த்தையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் பெலாரஸ் நாட்டின் கோமல் பகுதியில் சமாதான பேச்சுவார்த்தை துவங்கியது. அதில் உக்ரைன் பிரதிநிதிகள் ரஷ்ய ராணுவம் முழுமையாக எங்களின் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், என்று கோரிக்கை விடுத்தது.

ரஷ்யா தொடர்ச்சியாக தாக்கி வரும் இந்த கொடூர தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் பிரதமர் ஆண்களை தவிர பெண்கள் குழந்தைகள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறலாம் என உத்தரவிட்டதன் பேரில் பெண்களும் குழந்தைகளும் நாட்டை விட்டு சாலை மார்க்கமாக வெளியேறி வருகிறார்கள். இதில் ஆண்கள், தன்னார்வலர்கள், உக்ரைன் ரானுவத்தோடு இணைந்து உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து துப்பாக்கி ஏந்தி போர் புரிந்து வருகிறார்கள்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான உயர்மட்டக்குழு பிரதிநிதிகள் கலந்து கொண்ட சமாதான பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரம் நடந்து நிறைவு பெற்றது. இதில் உக்ரைன் தரப்பில் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி ரஷ்ய ராணுவம் முழுவதுமாக வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது ஆனால் ரஷ்யா தரப்பில் என்னென்ன நிபந்தனைகள் வைக்கப்பட்டது என்பது இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் ரஷ்ய அணு ஆயுதத்தை கொண்ட முப்படைகளும் தயார் நிலையில் உள்ளது, என்று அறிவித்துள்ளது. அதாவது தரையில் இருந்து ஏவுகணை மூலமாக ஏவக்கூடிய அணு ஆயுதப் படை, மற்றும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து அனுஆயுதத்தை ஏவக்கூடிய நீர்மூழ்கி கப்பல் படை மற்றும் விமானத்திலிருந்து அணு ஆயுதத்தை ஏவக்கூடிய விமானப்படை தயார் நிலையில் இருக்கின்றது என்று ரஷ்ய மிரட்டியுள்ளது, மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்