உசிலம்பட்டியில் வெடிவிபத்து மாடி தரைமட்டம் ஒருவர் பலி

0
302

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்த காத்தம்மா இவர் வீட்டு விசேஷங்களுக்கு பட்டாசு தயாரித்து கொடுக்கும் தொழிலை செய்து வந்தார் இந்நிலையில் அஜித் என்ற வாலிபர் விசேஷத்திற்காக பட்டாசு வாங்க வந்தார் அப்பொழுது காத்தம்மா தனது பிள்ளைகளான பிரவீன் பிரதீப் இருவரும் வெளியில் சென்று இருப்பதால் மாடிக்கு சென்று பட்டாசை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.

மேலே சென்று அஜித் பட்டாசு எடுத்த போது எதிர்பாராதவிதமாக பட்டாசு மொத்தமாக வெடித்து மாடிகட்டடம் இடிந்துவிழுந்ததில் முழுவதும் சிதறியது.இதில் சம்பவ இடத்திலேயே அஜித் பலியானார். மற்றும் கட்டிட இடிபாடுகளில் வெளிப்பாடு வெடி விபத்துகளினால் அண்டை வீட்டில் வசிக்கும் பெண் மற்றும் சிறு குழந்தையும் காயம் ஏற்பட்டது.

வெடிவிபத்தின் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை எஸ்பி சம்பவ இடத்தை பார்வையிட்டார். வழக்கு பதிவு செய்து காத்த மாலை கைது செய்தனர். தப்பி ஓடிய பிரவின் மற்றும் பிரதீப்பை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்