வைகோவின் மகன் வையாபுரிக்கு மதிமுக வில் உயரிய பொறுப்பு.

0
113

தற்போது நடைபெற்று வரும் மதிமுக வின் பொதுக்குழு கூட்டத்தில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக “வைகோவின் மகன்” துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. துரை வையாபுரி யின் பொறுப்புக்கும், இரண்டு மாநில துணைச்செயலாளர் பொறுப்புக்கும், ஒரு தணிக்கைச் செயலாளர் பொறுப்புக்கும் தேர்தல் நடைபெற்றது.

அதில் துரை வையாபுரி க்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படாத நிலையில் தற்போது அவர் மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் கட்சியின் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு முழு அதிகாரம் அளிக்கும் தீர்மானமும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்