வள்ளியூர் மக்கள் நிவாரணம் கேட்டு புகார்

0
127

நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வள்ளியூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக வள்ளியூர் ஊர் முழுவதும் உள்ள தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது…ஆனாலும் ஒரே நாளில் வற்றிவிட்டது, அந்த தண்ணீர் பெரும்பாலும் அருகே உள்ள தாழ்வான பகுதியான கோட்டையடி கிராமத்துக்குள் சாக்கடை நீருடன் கலந்து சென்று, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது
,இதன் காரணமாக
பலவீடுகள் இடிந்துபோனது.

வீடுகளில் பாம்புகள் வர ஆரம்பித்தன மற்றும் பல நோய்கள் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு வீடுகளில் சூழ்ந்த சாக்கடை கலந்த மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் பலருக்கும் தெரிவித்தபோதும், யாரும் அதை செய்ய முன்வரவில்லை, அதனால்நோய் பரவும் அபாயம் உள்ளது; ஏற்கனவே வள்ளியூரில் இருந்து கழிவு நீர் செல்வதற்க்கான வடிகால் இல்லை , கோடைகாலத்தில் சரி செய்து தரவேண்டும், நிரந்தர தீர்வு செய்து தர வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளில் பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தும்
எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இதேபோல் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து மூன்று முறை கோட்டையடி குடியிருப்புகளை பாதித்திருக்கிறது.


அப்போதெல்லாம் மக்கள் சாலைமறியல் செய்தனர். ஆனாலும் நரந்திர தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. இப்போதைய மழைக்காலத்தில் கோட்டையடி மிகவும் கடுமையான பாதிப்புக்கு
உள்ளாகியுள்ளதால் கோட்டையடி பொதுமக்கள் 200க்கு மேற்பட்டோர், இன்று வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர், நேற்று சம்பவ இடத்திற்கு ராதாபுரம் வட்டாட்சியர் ஜேசுராஜன் மற்றும் வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சமய சிங் மீனா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினாரகள்.


ஆனால் வாக்குகொடுத்தபடி வடிகால் வெட்டி தண்ணீரை வெளியேற்ற எந்த வேலையும் நடைபெறவில்லை. ஆகையினால்
நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை சாலை மறியலை கைவிடமாட்டோம் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்காலிகமாக ஜேசிபி இயந்திரம் மூலம் சாக்கடை கால்வாயே அகற்றியுள்ளனர் இருப்பினும் ஊருக்குள் தண்ணீர் வடியவில்லை

இதற்கு நீரந்தர தீர்வு எங்கே ?
தாசில்தாரின் ஒத்துழைப்பு இல்லை என்று பாதிக்கப்பட்டோர் குறை கூருகின்றனர்.
மாவட்ட கலெக்டர் தலையிட்டு நிரந்தரமான வழிவகைகளை செய்யவேண்டும் என்று போராடுவோர் வேண்டுகிறார்கள்.
உடனடியாக வீடுகளுக்குள் கட்டியிருக்கும் தண்ணீரை அகற்றுவதோடு , வீடு இடிந்து பாதிக்கப்பட்ட வர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்