கிலோ 7 லட்சம் வரையிலும் விலை போகும் இரண்டு அகர் மரங்கள் கண்டுபிடிப்பு…

0
225

(02-02-2022)

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரண்டு அகர் மரங்களை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இம் மரங்களானது உலக சந்தையில் கிலோ 7 லட்சம் வரை விலை போகக் கூடியதாகும். உலகில் பல்வேறு நாடுகளில் அழியும் நிலையில் உள்ள அகர் மரங்களுக்கு உலகமெங்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

தமிழ்நாட்டில் நீலகிரி வன சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வகையான மரங்களே இல்லை என ஏற்கனவே வனத்துறையினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது கூடலூர் அருகே வனப்பகுதியில் 2 அகர் மரங்கள் இருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் .அந்த மரங்களைக் கொண்டு மேலும் அதிகமான மரங்களை இனப்பெருக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்..

தமிழ், நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்