உக்ரைனுக்கு வெற்றி உறுதி – விளாடிமிர் செலன்ஸ்கி.

0
341

ரஷ்யா உக்ரைன் போர் 6 ஆவது நாளாக நடந்துகொண்டிருக்கும் இந்த பதற்றமான சூழ்நிலையில் ஐ. நா மன்றம் கூட்டிய அவசரக் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி தற்போது உரையாற்றியுள்ளார். நேற்று பெலாரஸ் நாட்டில் நடந்த ரஷ்யா உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள இவ்வேளையில் அதிபர் செலன்ஸ்கியின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஐ.நா மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த சிறப்பு கூட்டத்தில் உரையாற்றிய விளாடிமிர் ஜெலன்ஸ்கி “நாங்கள் எந்த விதத்திலும் ரஷ்யப் படைகளுக்கு குறைந்தவர்கள் அல்ல எனவும், இறுதிவரை உறுதியாக நின்று போரிட்டு ரஷ்யப் படைகளை வீழ்த்தி இந்தப் போரில் நாங்கள் வெற்றி காணுவோம் என்றும், உறுதியாக இப்போரில் உக்ரைன் வெல்லும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்