பூஜையில் சிறுமியிடம் அத்துமீறல் ; கோயில் பூசாரி கைது

0
30

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. பத்தாம் வகுப்பு முடித்துள்ள இந்த சிறுமிக்கு கடந்த சில தினங்களாக வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஊராளி கருப்பர் கோயிலில் பூசாரி பழனி என்ற 65 வயது முதியவரிடம் சிறுமியை அழைத்துச்சென்று அவரது பெற்றோர் குறி கேட்டுள்ளனர். அப்போது, சிறப்பு பூஜை செய்து சிறுமியின் வயிற்று வலியை குணப்படுத்துவதாக, பூசாரி பழனி கூறியுள்ளார். இதனை நம்பிய தாய் சிறுமியை பூசாரி பழனியின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற பூசாரி பழனி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி 3 மாதம் கர்ப்பம் ஆனார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் மகளிடம் விசாரித்தபோது பூசாரியின் பலான பூஜை விபரம் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகாரளித்தார். இது தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோயில் பூசாரி பழனியை கைது செய்தனர். இதன் பிறகு கைது செய்யப்பட்ட பூசாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பத்தாம் வகுப்பு சிறுமியின் வயிற்றுவலி பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கூறி அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து மூன்று மாத கர்ப்பிணியாக்கிய கோயில் பூசாரியின் செயல் மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெ. சூர்யா,நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்