விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதானவர்களின் வீட்டில் சிபிசிஐடி சோதனை.

0
216

விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக முன்னாள் நிர்வாகி மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள், அதன் அடிப்படையில் 8 பேரின் வீடுகளிலும் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் வீட்டிலிருந்த லேப்-டாப், பென் டிரைவ் போன்ற மின்னணுக் கருவிகளை முதற்கட்டமாக சிபிசிஐடி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதன்மூலம் அவர்கள் வேறு சில குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளார்களா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விருதுநகர் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்