நெல்லை வந்த வி.கே.சசிகலா: மகிழ்ச்சி வெள்ளத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்த கட்சி தொண்டர்கள்

0
143

நெல்லை மாவட்டத்திற்கு வந்த, வி.கே. சசிகலாவுக்கு, அம்மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தென்மாவட்டங்களுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக வி.கே. சசிகலா, சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் பூங்கொத்து, பொன்னாடைகள் அளித்து சிறப்பான வரவேற்றனர். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, தென்மாவட்டங்களுக்கு ஆன்மிக சுற்றுலா வந்துள்ளதாகவும், தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

நெல்லை மாவட்ட எல்லைக்கு வந்த சசிகலாவுக்கு அதிமுக கொடியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக முன்னாள் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் வெண்மதி தலைமையில் ஏராலமான தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

அங்கிருந்து, நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் உள்ள விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்ற சசிகலா, அங்கு சாமி தரிசனம் செய்தார். அப்போது ஏராளமான ஆதரவாளர்கள், சசிகலாவுக்கு ஆதரவாக வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். இந்த பயணத்தின்போது, நெல்லை மற்றும் குமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள், சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

நெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் நாராயணன், சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும், நெல்லை மாவட்ட அதிமுக பிரதிநிதி வேம்பையா பாண்டியன், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் குமரி மாவட்ட செயலாளர் பில்மேர் ராபர்ட் ஆகியோர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்