செல்லும் இடங்களில் எல்லாம் கேள்விக்கணைகளால் விரட்டப்படும் திமுகவினர்

0
151

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் திமுகவைச் சார்ந்த உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பாக கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த பொழுது, மாதம் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னீர்களே என்னாயிற்று என்று பெண்கள் அவர்களது பிரச்சார வாகனத்தை மறித்து கேள்விக் கணைகளால் துலைத்தனர். பதில் கூற முடியாமல் தவித்த உதயநிதி ஸ்டாலின் மிகவும் மழுப்பலாக சற்று கோபத்துடன் இன்னும் நாலு வருடம் இருக்கிறதே என்று சொல்லிவிட்டு மறுபடியும் பேச ஆரம்பித்தார்.

இந்நிலையில் கனிமொழி நேற்றிரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அதேபோல் கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று என்று பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு அவரது வாகனத்தை மறித்து கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்பினார்கள்.

கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தவித்த கனிமொழி அவர்கள் சமாளித்துக்கொண்டு செய்வோம் சீக்கிரத்தில் செய்வோம் என்று மழுப்பல் பதிலை கூறினார்.

கேஸ் விலை எப்போது குறைப்பீர்கள் என கேள்வி கேட்டதற்கு, நாங்கள் மாநில அரசுதான் மத்திய அரசிடம் தான் கேஸ் விலை குறைக்கக்கூடிய அதிகாரம் இருக்கிறது எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று மழுப்பல் பதில் கூறினார்.

இப்படி செல்லும் இடங்களிலெல்லாம் திமுகவினர் பொதுமக்களால் கேள்விக் கணைகளால் துளைக்கப்பட்டு விரட்டி அடிக்க படுவது தொடர்கதையாகி வருகிறது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்