Sunday, October 24, 2021

மாஞ்சோலை சுற்றுலா செல்ல வேண்டுமா? தமிழக வனத்துறை சிறப்பு ஏற்பாடு

களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்துக்குட்பட்ட மாஞ்சோலை மலைப்பகுதிக்கு சூழல் சுற்றுலா செல்ல வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

மாஞ்சோலை என்பது சுற்றுலா தளம் அல்ல . இது புலிகள் சரணாலயத்துக்குட்பட்ட பகுதி என்பதால் இங்கு யாரும் அவ்வளவு எளிதில் செல்ல முடியாது .குறிப்பாக இரு சக்கரவாகனத்தில் செல்லவே முடியாது . இந்தநிலையில்
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நேற்று முதல் வனத்துறை மூலமாக சுற்றுலா செல்ல வாகனம் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த வாகனம், அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 4 மணி வரை ஒருமுறை இயக்கப்படுகிறது. அரசு விடுமுறை நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிறகு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் என இருமுறை இயக்கப்படுகிறது.

மணிமுத்தாறு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த வாகனத்தில் செல்ல முன் அனுமதி தேவையில்லை. முதலில் வரும் 25 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஒரு நபருக்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.350, சிறுவர்களுக்கு ரூ.125. Still camera வுக்கு 50 ரூபாய் கட்டணமும் Handy Camera, Video Camera கொண்டு வருபவர்களுக்கு ரூ.300 கட்டணமும் செலுத்த வேண்டும்.

மேலும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
2,994பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,700சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles