தலைநகரை இழக்க மாட்டோம் உக்ரைன் அதிபர் சூளுரை

0
429

கீவ் நகருக்குள் ரஷ்ய ராணுவம் உள்ளே நுழைய முடியாத வகையில் பாலங்கள் மற்றும் சுற்றுப்புற வழிகளை தடை செய்து அ த்த உக்ரேனின் முயற்சி தோல்வியில் முடிந்தது. தற்பொழுது ரஷ்ய ராணுவம் பாராசூட் மூலமாக நூற்றுக்கணக்கான வீரர்களை கீவ் நகரில் உட்பகுதிக்குள் இறக்கி வருகின்றது. நகரின் முக்கிய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தற்பொழுது ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டது. கீவ் நகரில் உள்ள விக்டரி அவன் இராணுவத்தளம் மீது ரஷ்ய படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷ்ய ராணுவத்தின் போக்குவரத்து விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தற்போது தெரிவித்துள்ளது. .

போர் பதற்றம் அதிகமாகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் நாங்கள் தலைநகரை ஒருபோதும் இழக்க மாட்டோம் என உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கீவ் நகரம் ரஷ்ய படைகள் வசம் ஆவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன, என அமெரிக்கா கணித்துள்ளது. இன்னும் 48 மணி நேரத்தில் கீவ் நகரம் முழுவதும் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும் என்று அமெரிக்கா கணித்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்