பிரான்ஸ் அனுப்பிய ஆயுதங்கள், போர் தளவாடங்கள் உக்ரைனுக்கு வந்துகொண்டிருக்கிறது -ஜெலன்ஸ்கி

0
433

உக்ரைன் ரஷ்யா போர் மூன்றாவது நாளாக உச்சத்தை எட்டியுள்ளது தொடர்ந்து நகரின் எட்டு திசையிலும் குண்டுமழை சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கின்றது.

கிவ் நகரை முற்றுகையிட்டு உள்ள ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி டாங்கிகள் மூலம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கீவ் நகரை நோக்கி படையெடுத்து வரும் ரஷ்ய போர் வீரர்கள் 3,500 பேரை சுட்டுக் கொன்று உள்ளதாகவும், 200 பேரை பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ராணுவத்திற்கு சரியான பதிலடி கொடுத்து வருகிறோம் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

போருக்காக அழைக்கப்பட்ட உக்ரைன் நாட்டு மக்கள் தாங்களாக முன்வந்து நாட்டை காக்க துப்பாக்கியை கையில் ஏந்தி போராடி வருகின்றனர். இதில் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் துப்பாக்கி ஏந்தி பயிற்சியில் ஈடுபட்டு நாட்டை காக்க முன்வந்துள்ளனர் இதில் 80 வயது முதியவர் ஒருவர் தன் நாட்டை காக்க துப்பாக்கி கையில் ஏந்தி நாட்டிற்காக உயிரை கொடுக்க தயார் என அவர் சூளுரைத்து யுத்த களத்தில் இறங்க நிற்கும் காணோளி சமூக ஊடகங்களில் வலம்வந்து அவருக்கு பெரும் அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அனைத்து திசைகளிலும் உடனடியாக தாக்கி ஆட்சியை ரானுவம் கைப்பற்றுமாறு ரஷ்ய ராணுவத்தை புதின் உத்தரவிட்டுள்ளார்.

பிரான்ஸ் அனுப்பிய ஆயுதங்கள் மற்றும் யுத்த தளவாடங்கள் உக்ரைனை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்