நெல்லை டவுனில் மயில் இறகுகள் விற்கப்பட்டதா?

0
194

நெல்லை மண்டல வனப்பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் ஹேமலதா அதிரடி சோதனை-நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் மற்றும் ரதவீதி பகுதிகளில் மயில் இறகுகள் விற்பனை செய்யப்படுவதாக நெல்லைமண்டல வன பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் ஹேமலதாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று நெல்லையப்பர் கோவில் முன்பு உள்ள பகுதிகளில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த நரிக்குறவர்களிடம் மயில் இறகுகள் வைத்துள்ளார்களா? எனவும் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களிடம் மயில் இறகுகள் இல்லை என்பது தெரியவந்தது.


இதையடுத்து நெல்லை மண்டல வன பாதுகாப்பு படை உதவி வன பாதுகாவலர் ஹேமலதா அங்கிருந்த நரிக்குறவர்களிடம் மயில் இறகுகள் விற்பனை செய்வது குற்றம் ஆகவே அது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்