விபச்சாரத்தில் ஈடுபட்ட மனைவியின் தலையை துண்டித்த கணவன்

0
232

விபச்சாரத்தில் ஈடுபட்ட மனைவியின் தலையை துண்டித்த கணவன் இணையத்தில் வைரலாகும் வீடியோ.

ஈரானில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தனது மனைவியின் தலையை துண்டித்த கணவன் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

விபச்சாரத்தில் ஈடுபட்ட தனது மனைவியை தலையை துண்டித்து அந்த தலையுடன் தெருவில் நடந்து சென்ற நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு போலீசார் மோனா கிடாரி என்ற இளம் பெண்ணின் தலை என்பதைக் கண்டறிந்தனர். மேலும் ஈரானின் தென் மேற்கு நகரமான அக்குவாவில் வசித்து வரும் இந்த பெண் குறித்து விசாரித்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் மைத்துனரை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் மனைவி விபச்சாரத்தில் ஈடுபட்டதால் தலையை துண்டித்து கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த வழக்கு குறித்து விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க ஈரானின் மகளிர் விவகாரங்களுக்கான துணை தலைவர் என்ஸிக் கசாலி தெரிவித்தார். குடும்ப வன்முறைக்கு எதிரான பெண்களை பாதுகாக்க சட்டங்களை சீர்திருத்த வேண்டும், என்றும் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயதை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளன. இது குறித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் எல் ஹோம் நடாப் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்காக சட்டங்களை செயல்படுத்த உறுதியான நடவடிக்கை இல்லாததால் இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் நடந்து வருகின்றன என வருத்தத்துடன் தெரிவித்தார்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்