அழிந்துவரும் பரதக்கலை அரசு கவனம் செலுத்துமா ?

0
182

இந்தியா இன்று சினிமாவில் உச்சம் பெற்று இருக்கின்றதுவோ அதுபோல அன்று மேடை நாடகங்கள் மிகவும் உச்சம் பெற்றிருந்தது. அக்காலக்கட்டங்களில் பரதநாட்டியம் என்ற ஒன்றும் ,அதற்கு ஈடு இணையாக செயல்பட்டு வந்தது.

எங்கு பார்த்தாலும் அரங்கேற்ற காட்சிகள்தான் இருக்கும் அரங்கேற்றம் என்பது முதன்முதலாக பரதநாட்டியம் கற்றுக் கொண்டு அதனை மேடையில் முதல் வாய்ப்பாக குருவின் முன்னிலையில் தன் திறமையை பொதுமேடையேற்றுவதே அரங்கேற்றம் ஆகும்.

கொடி கட்டிப்பறந்த அந்தத் கலை இப்போது எங்கே போயிற்று என்று தெரியவில்லை அத்தி பூத்தாற்போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதோ ஒரு சில இடங்களில் மட்டும் மேடையேற்றப்படுகின்றது.

பிரத்தியேகமாக இதுபோன்ற பரதநாட்டியக் கலைகளை வளர்க்க நாடக சபாக்கள், சங்கீத சபாக்கள் இருந்தன இன்று சபாக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இத்துறை வல்லுநர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர் போல ஒரு சிலர் மட்டும் சில பல இடங்களில் உயிரோட்டம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் அது போன்ற கலைஞர்களை ஊக்குவித்து மீண்டும் நம் இந்திய பாரம்பரியக்கலையான பரதநாட்டியம் மீண்டும் எவ்விடத்திலும் காலூன்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வழிமேல்விழிவைத்து இக்கலைஞர்கள் காத்திருக்கின்றனர்.

தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்