“திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – அண்ணாமலை

0
129

விருதுநகர் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட சம்பவத்தில் திமுக முன்னாள் நிர்வாகி, பள்ளி மாணவர் 4 பேர் உட்பட இதுவரை 8 பேர் கைதாகியுள்ளனர். இந்த வழக்கு முதலமைச்சரின் உத்தரவின்படி நேற்று சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் எனவும் கோரி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக விருதுநகர் எம்ஜிஆர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற “பாரதிய ஜனதா மாநிலத் தலைவர்” அண்ணாமலை, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் , பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வழங்கப்படாத தண்டனை தமிழகத்தில் வழங்கப்படும் என முதலமைச்சர் அண்மையில் அறிவித்ததற்கு பிறகும்,பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தற்போது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியைப் பெண்கள் வெறுப்பதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்